2006 சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் வெற்றிபெற்றார். அதேபோல் பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய தொகுதிகளிலும் அவரது கட்சி வேட்பாளர்கள் அப்போது வெற்றிபெற்றனர். அன்று முதல் கடலூர் மாவட்டத்தின்மீது தீராத காதல் கொண்டிருந்தார்.  

Advertisment

விஜயகாந்த் உயிரோடு இருந்தபோது கடலூர் மாவட்டத்தில் பிரம்மாண்டமான முறையில் ஒரு மாநாடு நடத்த வேண்டுமென ஆசைப்பட்டிருந் தார். அதன்படி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு விளம்பரம், போஸ்டர்கள் எல்லாம் தயாரான நிலையில் அவரது உடல்நிலை மோசமானது, மழை சீசன் காரணமாக மாநாடு நடைபெறாமல் நின்றுபோனது. விஜயகாந்தின் கனவை நிறைவேற்றும் வகையில் கடலூர் மாவட்டத்தில் மாநில மாநாட்டை நடத்தியே தீருவது என்று பிரேமலதா முடிவுசெய்தார். அதன்படி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் வேப்பூரை அடுத்த பாசார் பகுதியில் மாநாடு நடத்த இடம் தேர்வுசெய்த பிரேமலதா, தமிழகத்தின் பல பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்தார். சென்ற இடங்களில் எல்லாம் 2026, ஜனவரி 9 பாசாரில் நடைபெறும் மாநில மாநாட் டிற்கு திரளாக வரவேண்டும் என்று தொண்டர் களுக்கு அழைப்பு விடுத்ததோடு, அந்த மாநாட்டில் நமது கட்சி யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது என்பதை அறிவிப்பேன் என்றும் தெரிவித்துவிட்டு வந்திருந்தார். இந்நிலையில் ஜனவரி 9ஆம் தேதி மாநாடு திட்டமிட்டபடி நடைபெற்றது. கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கா னோர் திரண்டு வந்திருந்தனர். மாநாட்டு மேடை யில் கட்சி நிர்வாகிகள் பிரேமலதாவுக்கு வீரவாள் பரிசளித்தனர். மைக் பிடித்த பிரேமலதா, “"விஜய காந்த்துக்கு முதல் வெற்றியைக் கொடுத்தது கடலூர் மாவட்டம். இது தே.மு.தி.க.வின் கோட்டை. விஜயகாந்த்தைப் போன்ற தலைவர் யாருமே இல்லை. கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டு இருக்கிறது. 

Advertisment

தேர்தல் வந்தாலே தே.மு.தி.க. பேரம் பேசுவதாகச் சொல்கிறார்கள். நான் கூட்டணி குறித்து எங்கள் கட்சி மாவட்ட, ஒன்றிய நிர்வாகி களுடன் மட்டும்தான் பேசியுள்ளேன். வேறு யாருடனும் பேசவில்லை. தமிழகத்தில் தே.மு.தி.க. ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்கமுடி யாது. நாம் இணையும் கட்சிதான் ஆட்சி அமைக்கும். உங்களுக்கு என்ன கொள்கை என்று கேட்பவர்களுக்கு வெற்றி ஒன்றுதான் எங்கள் கொள்கை என்று சொல்லுங்கள். சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ஜனவரி ஒன்பதாம் தேதி அறிவிப்பதாக நான் ஏற்கனவே கூறியிருக் கிறேன். இதுகுறித்து கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கள் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளார்கள். (தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. இந்தக் கட்சிகளில் எந்தக் கட்சியோடு கூட்டணி வைக்கலாம் என்பதை மாவட்டச் செயலாளர்கள் சீட்டில் எழுதி பெட்டியில் போடவைத்து அதன்படி கூட்டணி யாருடன் என முடிவுசெய்துள்ளார்.) அந்த அடிப் படையில் யாருடன் கூட்டணி வைக்கவேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டேன். ஆனால் இந்த மாநாட்டில் அதை அறிவிக்க வேண்டுமா? என்பதுதான் என் கேள்வி. 

தமிழகத்தில் எந்த கட்சியும் இதுவரை கூட்டணி குறித்து முடிவுகளை அறிவிக்கவில்லை. எனவே நாமும் சிறிது சிந்தித்து, ஆலோசித்து தெளிவாக நல்ல முடிவை எடுப்போம். தை பிறந்தால் வழி பிறக்கும். அதுவரை பொறுத்திருங் கள். சத்ரியனாக  வாழ்ந்துவிட்டோம். இனி சாணக் கியனாக வாழவேண்டும். ஆளும் கட்சி, ஆண்ட கட்சி யாரும் இதுவரை கூட்டணி முடிவை அறி விக்கவில்லை. நாம் மட்டும் ஏன் முந்திரிக்கொட் டை மாதிரி அவசரப்பட வேண்டும். யோசித்து தைரியமாக அடிப்போம். நம்மை மதிக்கிற கட்சி யுடன்தான் கூட்டணி''’என்று பேசினார் பிரேமலதா.

Advertisment

dmdkmeet1

விஜயகாந்த் மகனும் தே.மு.தி.க. இளைஞர் அணிச் செயலாளருமான விஜய பிரபாகரன் பேசும்போது, “"தமிழக வெற்றிக் கழக தலைவர் அண்ணன் விஜய் அவர்கள் காங்கிரசை நம்பக்கூடாது. காங்கிரஸ் இவருக்கு சப்போர்ட் செய்வதாக வெளியே காட்டிக்கொள்கிறது. இதை வைத்து தி.மு.க.விடம் ஆட்சியில் பங்கு, அதிக சீட்டு என்ற பேரத்தைப் பெறுவதற்காகவே இந்த நாடகம் நடத்துகிறது. எனவே காங்கிரஸை நம்பாதீர்கள்''’என்றார். 

பிரேமலதாவின் சகோதரரும் கட்சியின் பொருளாளருமான சுதீஷ் பேசுகையில், "2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் தே.மு.தி.க. வெற்றிபெறும். பிரேமலதா விஜய காந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழக துணைமுதலமைச்சராக பொறுப்பேற்பார். நமது கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. இதே இடத்தில் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தப்படும்''’என்ற சூளுரைத்தார். 

கூட்டணி குறித்து, பிறகு முடிவு என்ற பிரேமலதாவின் அறிவிப்பு தொண்டர்கள் மத்தி யில் ஒருவித ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டின் மூலம் கட்சியின் செல்வாக்கை மீண்டும் உயர்த்திவிட பிரேமலதா பெரும் முயற்சி செய்துள்ளார். இந்த மாநாட்டு கூட்டத்தைக் காட்டி கூட்டணிக்கு அழைக்கும் கட்சிகளிடம் பேசுவதற்கும் வசதியாக இருக்கும் என்று கணக்கு போட்டு மாநாட்டை நடத்தியுள்ளார். அவரது கணக்கு எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது அவர் இடம்பெறும் கூட்டணி சீட்டுகளை ஒதுக்கும்போது தெரியவரும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.